தாய்லாந்து நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு அந்நாட்டு அரசுதேர்தலை அறிவித்துள்ளது. முழு ஜனநாயக அரசாக இல்லாதபோதும் அதற்கான முதல்படியாக இந்தத் தேர்தல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு தொழிலதிபரும் அரசியல்வாதியுமான தக்சின் ஷினவத்ரா (thaksin shinawatra) தேர்தலில் வெற்றிபெற்று அதிபரானார். பின்னர் நடைபெற்ற 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் அவரே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிபுரிந்தார்.
இந்நிலையில், அவர்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இதனால் 2014ஆம் ஆண்டுதக்சின் ஷினவத்ராஆட்சி கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5.3 கோடி வாக்காளர்களை கொண்ட தாய்லாந்து நாட்டில் மொத்தம் 500 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 251 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியைபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.