கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது சீனாவில் குறைந்துவருகிறது. இருப்பினும் மற்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தாய்லாந்து நாட்டில் தற்போது அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை வரும் செவ்வாய் கிழமை(மார்ச் 25) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சாதாரண சூழ்நிலையில் இல்லாத அதிகாரங்களும் அரசுக்கு தற்போது வழங்கப்படும். ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்துதல், ஊடகங்களை தணிக்கை செய்தல், ராணுவத்தை களமிறக்குவது என பல அதிகாரங்களும் தற்போது அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக தொலைக்காட்சியில் பேசிய தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா, "பொதுமக்கள் தயது செய்து அமைதியாக இருங்கள். சமூக ஊடகங்களை தவறான முறையில் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'வெளியே வந்தால் சுட்டுத் தள்ளுங்கள் - அதிரடி காட்டும் சந்திரசேகர ராவ்'