2014ஆம் ஆண்டு தாய்லாந்தில் பெகு தாய் கட்சியைச் சேர்ந்தஅப்போதையபிரதமர் யங்லாங் ஷினவத்ராவுக்கு எதிராக ராணுவ புரட்சி நடத்தப்பட்டதையடுத்து, அவரது பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. பின்னா், ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து,ராணுவ தளபதியான பிரயாட் சான்ஓசா பிரதமராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில்,24ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசாவுக்கு எதிராக பெகு தாய் கட்சியைச் சேர்ந்த சூடாரத் கீரப்பான் இடையேகடும் போட்டிநிலவியது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் 7.5 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ள பிரதமர் பிரயாட் சான்ஓசா முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சூடாரத் கீரப்பான் 7 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் பிரதமராக பிரயாட் சான்ஓசா பிரதமராகப் பதவியேற்கஉள்ளார் எனஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.