தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஆப்கனில் முனைவர், இளங்கலை பட்டங்கள் செல்லாது'- கல்வி அமைச்சர்! - ஷேக் மெல்பி நூரல்லா முனீர்

ஆப்கானிஸ்தானில் முனைவர் (பி.ஹெச்டி), இளங்கலை உள்ளிட்ட பட்டங்கள் செல்லாது என அந்நாட்டின் உயர் கல்வி அமைச்சரும் தலிபான் தலைவருமான ஷேக் மெல்பி நூரல்லா முனீர் (Sheikh Molvi Noorullah Munir) தெரிவித்துள்ளார்.

Sheikh Molvi Noorullah Munir
Sheikh Molvi Noorullah Munir

By

Published : Oct 7, 2021, 1:29 PM IST

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது, தலிபான்களின் தலைவர்களுள் ஒருவரான ஷேக் மெல்பி நூரல்லா முனீர் (Sheikh Molvi Noorullah Munir) நாட்டின் உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் படித்து பெற்ற முனைவர் (பி.ஹெச்டி), இளங்கலை, முதுகலை, பட்டயப் படிப்பு மற்றும் பள்ளிப் படிப்பு என எந்தப் பட்டங்களும் செல்லாது” எனத் தெரிவித்தார்.

இது அந்நாட்டில் உள்ள கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முனீர் பேசியது தொடர்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

தலிபான்களால் செவ்வாய்க்கிழமை (அக்.5) அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் 33 உறுப்பினர்களில் முனீரும் ஒருவர். முல்லா முகமது ஹாசன் பிரதமராகப் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட சிராஜுதீன் ஹக்கானி (ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர்) உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் உள்ள அனைத்து உயர் பதவிகளும் இயக்கத்தின் முக்கிய தலைவர்களுக்கும் ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தலிபான்களின் மிகவும் வன்முறைப் பிரிவான பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு பெயர் பெற்றது.

தலிபான் நிறுவனர் மற்றும் மறைந்த தலைவர் முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை நிறுவனர் அப்துல் கானி பரதர், 2020 இல் அமெரிக்க திரும்பப் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட்டவர். இவர் தற்போது துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசு நியமித்த அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களில் ஒரு பெண் கூட நியமிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : கடவுச்சீட்டு, அடையாள அட்டைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் தலிபான்

ABOUT THE AUTHOR

...view details