தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கடவுச்சீட்டு, அடையாள அட்டைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் தாலிபான் - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கடவுச்சீட்டு, அடையாள அட்டைகளில் 'இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்' எனப் பெயர் மாற்றம் செய்யவிருப்பதாகத் தாலிபான் அறிவித்துள்ளது.

Taliban to change Afghan passports, national identity cards
Taliban to change Afghan passports, national identity cards

By

Published : Sep 27, 2021, 7:38 AM IST

காபூல்:கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபான் அமைப்பினால் கைப்பற்றப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பின் தாலிபான் அரசு தற்போது ஆட்சியமைத்துள்ளது.

புதிதாக அமைந்துள்ள இஸ்லாமிக் அமீரக அரசின் அமைச்சரவையில் பிரதமராக முல்லா முகமது ஹசன் பதவி வகிக்கிறார். முல்லா அப்துல் கனி பரதார், மொலாவி அப்துல் சலாம் ஹனாபி ஆகியோர் துணைப் பிரதமர்களாகப் பதவியில் உள்ளனர்.

தற்போதுவரை செல்லுபடியாகும்

இந்நிலையில், தகவல் மற்றும் கலாசாரத் துறையின் இணையமைச்சரும், தாலிபான் செய்தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித், காமா செய்தி நிறுவனத்திடம் (The Kaama Press News Agency) ஆப்கனின் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டைகளில் (NID) 'இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய ஆப்கானிஸ்தான் அரசு வழங்கிய அடையாள அட்டைகள், ஆவணங்கள் இன்னும் செல்லுபடியாகும் எனக் கூறியுள்ளார். தற்போதுவரை, ஆப்கானிஸ்தானில் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை துறைகள் செயல்பாட்டில் இல்லை.

அடையாள குறியீடுகளை (BIO - METRICS) பதிவுசெய்தவர்கள் மட்டுமே கடவுச்சீட்டையும், தேசிய அடையாள அட்டைகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய தாலிபன் - ஆப்கனில் மீண்டும் கடுமையாகும் கொடூரச் சட்டங்கள்

ABOUT THE AUTHOR

...view details