தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவை வெறுப்பேற்ற லித்துவேனியாவுக்கு இடம்பெயர்ந்த தைவான் - லிதுவேனியா தலைநகர் வில்நியஸ்

தைவான் நாட்டின் புதிய பிரிதிநித்துவ அலுவலகம் ஒன்று லித்துவேனியா நாட்டில் திறக்கப்பட்டது சீனாவை சீண்டியுள்ளது.

Taiwan
Taiwan

By

Published : Nov 19, 2021, 4:02 PM IST

Updated : Nov 19, 2021, 7:54 PM IST

லித்துவேனியா தலைநகர் வில்நியஸ் தனது பிரதிநிதித்துவ அலுவலகத்தை தைவான் திறந்துள்ளது. இந்த நகர்வு சீனாவை சீண்டி வெறுப்பேற்றியுள்ளது. எனினும் இது தொடர்பாக எந்தவொரு எதிர்வினையும் சீனா தரப்பு இதுவரை மேற்கொள்ளவில்லை.

தைவானை தன்னாட்சி கொண்ட பிராந்தியமாக அங்கீகரிக்க சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது. தைவானை சீனா தைபே என்றே அழைக்க வேண்டும், தைவானுக்கு ராஜரீக ரீதியான அங்கீகாரத்தை சர்வதேச நாடுகளோ அமைப்போ, சீனா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில் லித்துவேனியாவில் தைவான், தன்னுடைய பெயர் கொண்ட புதிய பிரதிநிதித்துவ அலுவலகத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் குறித்து சீனாவுக்கு முன்கூட்டியே தெரியவந்த காரணமாக லித்துவேனியா தலைநகர் வில்நியஸ்லிருந்து சீனா தனது தூதரை திரும்பப்பெற்றது.

சீனாவின் தொடர் அழுத்தம் காரணமாக தைவானுடன் ராஜரீக உறவை 15 நாடுகள் மட்டுமே மேற்கொண்டுவருகின்றன.

இதையும் படிங்க:580 ஆண்டுகளுக்குப் பின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம்

Last Updated : Nov 19, 2021, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details