ஹைதராபாத்:சீனா அரசு தைவானை சீனாவின் ஒரு பகுதி எனக் கூறிவருகிறது. இருப்பினும், தைவான் அரசு அதை தொடர்ச்சியாக மறுத்துவருகிறது. அண்மைக் காலங்களாக, தைவானுடைய வான் மற்றும் கடற்பகுதியில் சீனாவின் போர் விமானங்கள் வட்டமடித்தன.
சீனாவின் இச்செயலால், அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்படுள்ளதாகவும், தைவான் மீது சீனா அரசு படையெடுக்கும் எனவும் சர்வேதச சமூகம் கருதியது.
அமெரிக்காவின் நடவடிக்கை
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா கொடுத்துள்ள சமிக்ஞை சீனாவை எரிச்சலையூட்டியுள்ளது.
சர்வாதிகார நாடுகளுக்கு எதிராக ஜனநாயகத்தை கொண்டாடும் நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, உச்சி மாநாட்டை நடத்தவுள்ளதாக கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
அந்த மாநாட்டில் பேசப்படும் விஷயங்கள் குறித்த முன்வரைவு தாக்கல் செய்யப்படாத நிலையில், தைவானை அம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்கான சமிக்ஞையை அமெரிக்க கொடுத்துள்ளது.