தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கையில் 9 மத்திய அமைச்சர்கள் திடீர் ராஜினாமா! - நாடாளுமன்றம்

கொழும்பு: இலங்கை மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக பணியாற்றிவந்த ஒன்பது பேர் இன்று தங்களின் பதவிகளை திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

parliament

By

Published : Jun 4, 2019, 10:57 AM IST

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உலகையே உலுக்கியது. பலரையும் நிலைகுலைய செய்த இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை எனக்கூறி மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒன்பது அமைச்சர்கள் தங்களின் பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் ஒன்பது மத்திய அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது இலங்கை அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details