இலங்கையில் நேற்று நான்கு தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் இதுவரை 290 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மேலும் இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இலங்கை -பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு - இலங்கை விமான நிலையம்
2019-04-22 07:53:06
முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு வெடிகுண்டு இன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது. எட்டாவது குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஒன்பதாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் பின்புலத்தில் எந்த இயக்கம் உள்ளது என்பதை போலீசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள பயங்கரவாதிகள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இலங்கையில் சமூக வலைதளங்களின் சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.