இதுதொடர்பாக அந்நாட்டு எரிசத்தித்துறை அமைச்சகம் கூறுகையில், மசூக்கெல் நீர்தேக்கத்திற்கு அருகே கடந்த 22ஆம் தேதி, இத்திட்டத்தின் மூலம் 45 நிமிடங்களுக்கு பலத்த மழை பொழிந்தது. ஆனால் தற்போது செயற்கை மழையை தூண்டும் போதுமான ஈரப்பதம் இல்லாததால் இத்திட்டம் கைவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை முறையில் மழை பொழிய வைக்கும் திட்டத்தை கைவிட இலங்கை முடிவு! - rain
கொழும்பு: செயற்கை முறையில் மழை பொழிய வைக்கும் திட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
செயற்கை முறையில் மழை பொழியும் திட்டத்தை கைவிட அரசு முடிவு
மசூக்கெல் நீர்தேக்கலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில், விமானம் மூலம் மேகங்கள் மீது ரசாயன பொடிகளை தூவியதால் 45 நிமிடங்கள் மழை பொழிந்தது என தெரியவந்துள்ளது. பருவமழை பொய்த்ததால் மத்திய இலங்கை பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.