தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரிய தீபகற்பத்தில் பரபரப்பு - உஷார் நிலையில் தென்கொரியா - US intelligence agency North korea

சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை மோசமாகவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து கொரிய தீபகற்பம் பரபரப்பான அரசியல் சூழலை சந்தித்துவருகிறது.

தென்கொரியா
தென்கொரியா

By

Published : Apr 21, 2020, 1:27 PM IST

உலக அரசியலில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமில்லாத கொரிய தீபகற்பம் கரோனா பாதிப்பு காலத்திலும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சர்ச்சை நாயகனான வட கொரிய அதிபர் கிம் ஜாங், உடல்நிலை பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கொரிய நிறுவனர் பிறந்தநாள் விழாவில், அதிபர் கிம் பங்கேற்காததுதான் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 2011ஆம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற பின் அனைத்து ஆண்டும் பிறந்தநாள் விழாவில் கிம் தவறாமல் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு பங்கேற்காததால் சந்தேகம் கொண்ட அமெரிக்க உளவுத்துறை, அவரின் உடல் நிலை குறித்து துப்பு துலக்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, அண்டை நாடான தென்கொரியா இந்த நகர்வுகளை கூர்ந்து கவனித்துவருவதாகவும், பிராந்திய அரசியலில் எந்தவித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் அரசு உஷார் நிலையை கடைபிடித்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா ஆபத்தும்... புலம்பெயர்ந்த சிரியர்களும்...

ABOUT THE AUTHOR

...view details