தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தென் கொரியாவில் உறுதி செய்யப்பட்ட புதிய வகை கரோனா - இங்கிலாந்திலிருந்து திரும்பியவருக்கு புதிய வகை கரோனா

பிரிட்டனிலிருந்து தென்கொரியா திரும்பிய மூன்று பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா
புதிய வகை கரோனா

By

Published : Dec 28, 2020, 3:13 PM IST

சியோல்:பிட்டரின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக உருமாற்றமடைந்த வீரியமிக்க புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை கரோனா முந்தைய கரோனா வைரஸை காட்டிலும் 70 விழுக்காடு அதிவேகமாக பரவக்கூடியது என்பதால் அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், லண்டனிலிருந்து கடந்த நவம்பர் 22ஆம் தேதி தென் கொரியா திரும்பிய மூன்று பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் பதிவாகியுள்ள முதல் புதிய வகை கரோனா பாதிப்பு இதுவாகும். தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கடந்த நவம்பர் 8, டிசம்பர் 13 ஆகிய தேதிகளில் பிரிட்டனிலிருந்து தென்கொரியா திரும்பிய 80 வயது முதியவர் உட்பட சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பரவியிருப்பது புதிய வகை கரோனாவா என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னதாக, பிரிட்டன் உடனான விமான சேவைகளுக்கு தென் கொரியா அரசு தடைவிதித்தது. தற்போது வரை அந்நாட்டில் 57 ஆயிரத்து 680 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:அறிவியல் & தொழில்நுட்பம் 2020 - ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details