ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனைச் சேர்ந்த யாராகா பெய்ல்ஸ் என்பவரின் மகன் குவாடன்(9). குவாடன் அச்சோண்ட்ரோபிளாசியா (Achondroplasia) என்ற எலும்பு வளர்ச்சிக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர், சராசரி சிறுவர்களைவிட மிகவும் உயரம் குறைவாகயிருப்பார்.
அந்தக் குறைப்பாட்டை அவர் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதில் மனமுடைந்த குவாடன், பள்ளியைவிட்டு வீடு திரும்பும் வேளையில், தனது தாயிடம் யாராவது என்னைக் கொல்லுங்க, என் இதயத்தைக் குத்திக் கிழிங்க என கதறி அழுத்துள்ளார்.
அதைக்கேட்டு மனமுடைந்த தாய், அதைப்பதிவு செய்து 'எனக்கு ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ளத் துடிக்கும் மகன் கிடைத்துள்ளார்' எனக் கூறி, ட்விட்டரில் பதிவிட்டு தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ பதிவு தற்போது வலைதளங்களில் பரவிவருகிறது.