இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளன்று ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், நட்சத்திரத் தங்கு விடுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இலங்கை அரசுக்கு இந்திய உளவுத்துறை ஒரு வாரம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை அலட்சியப்படுத்தியதாக இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பெரும் அழுத்தத்திற்குள்ளான அதிபர் சிறீசேன அந்நாட்டு பாதுகாப்பு செயலரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்.