பாகிஸ்தானில் உள்ள் நன்கான சாஹிப் குருத்வாரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சீக்கியர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் சிறுபான்மைப் பிரிவினரான சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசு சீக்கியர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை மட்டுமல்லாது, பாஞ்சாப் மாநிலத்தலைவர்களும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெஷவார் மாகாணத்தின் சம்கனிப் பகுதியில் சீக்கிய இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 25 வயது மதிக்கத்தக்க அந்த நபர் ரவீந்தர் சிங் என்றும், அவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்றும் முதன்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவீந்தர் சிங்கின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? - கமலாலயத்தில் தீவிர ஆலோசனை