பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் மாவட்டத்தில் உலகப் பாரம்பரிய தலமான ரோஹ்தாஸ் கோட்டையின் வடக்கு எல்லையில், மகாராஜா ரஞ்சித் சிங் 1834ஆம் ஆண்டு 'ஷோ ஷாஹிப்' என்ற குருத்வாராவை கட்டினார். இந்த குருத்வாராவில் 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சீக்கியர்கள் குடியேறியதையடுத்து மூடப்பட்டது.
இந்நிலையில், இந்த குருத்வாரா 72 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறப்படுகிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 550ஆவது பிறந்தநாள் அடுத்த மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஷோ ஷாஹிப் குருத்வாரா திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால், சீக்கிய மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.