டாக்கா: வங்க தேச கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக வலம்வருபவர் ஷாகிப் அல் ஹாசன். இவரை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12.06 மணிக்கு ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நேரலையில் தோன்றிய அடிப்படைவாத இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேச்சின் போது, ஷாகிப் அல் ஹாசன் கொல்கத்தாவில் காளி ஊர்வலத்தை தொடங்கிவைத்துள்ளார். ஷாகிப் அல் ஹாசனின் செயலால், இஸ்லாமியர்கள் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவரை நான் துண்டு துண்டாக வெட்டவும் தயங்க மாட்டேன். இதற்காக சில்ஹெட் (மிரட்டல் விடுக்கும் இளைஞர் வசிக்கும் பகுதி) நகரிலிருந்து டாக்காவுக்கு வரவும் தயங்க மாட்டேன்” எனக் மிரட்டியிருந்தார்.
இது தொடர்பாக சில்ஹெட் மெட்ரோ கூடுதல் காவல் ஆணையர் அஷ்ரப் உல்லா தஹிர் கூறுகையில், “இந்த விஷயம் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. சம்மந்தப்பட்ட வீடியோ லிங்கை இணைய குற்றப்பிரிவு காவலர்களுக்கு அனுப்பியுள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இந்நிலையில் மீண்டும் ஃபேஸ்புக் நேரலையில் தோன்றிய சம்மந்தப்பட்ட அடிப்படைவாத இளைஞர், “தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் அனைவரும், குறிப்பாக பிரபலங்கள் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.