தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஃபைஸர், மாடர்னா போலவே அதிக பலனளிக்கும் ஸ்புட்னிக் வி, விலையோ செம குறைவு!

மாஸ்கோ: ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாகவும் தடுப்பு மருந்தை 10 டாலர்களுக்கு(இந்திய மதிப்பில் ரூ. 750) விற்பனை செய்யவுள்ளதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

Russia's Sputnik V
Russia's Sputnik V

By

Published : Nov 24, 2020, 9:49 PM IST

கரோனா பரவல் சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் சோதனைகளும் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.

அமெரிக்காவின் ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்து 95% தடுப்பாற்றலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து 90% தடுப்பாற்றலும் கொண்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாக தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ள கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுப்புமருந்தின் முதல் டோஸை எடுத்துக்கொண்டு 28 நாள்களுக்கு பின் தடுப்பாற்றல் 91.4 விழுக்காடும் 42 நாள்களுக்கு பின் தடுப்பாற்றல் 95 விழுக்காடும் உள்ளதாக கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி மையத்தின் தலைமை செயல் அலுவலர் கிரில் டிமிட்ரிவ், "ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கரோனா வைரஸுக்கு எதிராக மிகவும் திறமையான தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது 90 விழுக்காட்டிற்கு அதிகமாக செயல்திறனை பெற்றுள்ளது. இதே அளவு செயல்திறன் பெற்றுள்ள மற்ற தடுப்பு மருந்துகளைவிட எங்கள் தடுப்புமருந்தின் விலை இரண்டு மடங்கு குறைவு" என்றார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து 10 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 750) விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்பவர்களுக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்பட வேண்டும். இதுதவிர மற்ற தடுப்பு மருந்துகளை போல இல்லாமல், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை மிகக் குறைவான வெப்ப நிலையில் வைக்க தேவையில்லை.

ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் மூன்றாம கட்ட மருத்துவ சோதனை இந்தியா, ஐக்கிய அமீரகம், வெனிசுலா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முன்னதாக, கடந்த ஆக்ஸ்ட் 11ஆம் தேதி மூன்றாம்கட்ட மருத்துவ சோதனைக்கு முன்னரே தடுப்பு மருந்துக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருந்தது.

இதையும் படிங்க:"கரோனாவை கட்டுப்படுத்தலாம், ஆனால்..." - தடுப்புமருந்து வரவிற்குப் பிறகான சூழல் குறித்து உலக சுகாதார அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details