ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு நேற்று (ஆக. 21) திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்நாட்டின் சைபிரியா பகுதியிலிருந்து மாஸ்கோவுக்கு விமானம் வந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கோமா நிலையில் உள்ளதாகவும், ஐ.சி.யுவில் உள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.