உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்ண்ட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இருநாள்கள் நடக்கும் மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்தியா சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது.
ஆக மற்ற நாட்டு தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் பேசவுள்ளார். முன்னதாக அவர், தாஷ்கண்ட்டில் உள்ள மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்கிருந்த பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
2007ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைந்தன. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த ஆண்டு (2018) தஜிகிஸ்தானின் துஷன்பேயிலும் 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி பகுதியிலும் நடந்தது நினைவுகூரத்தக்கது.