இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகையினை ஒட்டி சிறப்பு பிரார்தனைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் அங்குள்ள கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்க்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர விடுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்பில் சுமார் 157 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தக் கோர சம்பவத்தில் இருந்து தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக ட்விட்டர் பக்கத்தில் ராதிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
அடக்கடவுளே! இலங்கையில் குண்டுவெடிப்பா? கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போதுதான் கிளம்பினேன், அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டர் பதிவு