தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"அப்படியெல்லாம் செய்யக்கூடாது" புடினை செல்லமாக திட்டிய ட்ரம்ப் - puthin

ஒசாகா: அமெரிக்க தேர்தல்களில் தலையிடக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடினை செல்லமாக எச்சரித்தார்.

"அப்படியெல்லாம் செய்யக்கூடாது" புடினை செல்லமாக திட்டிய ட்ரம்ப்

By

Published : Jun 28, 2019, 9:53 PM IST

Updated : Jul 17, 2019, 12:47 PM IST

ஜி20 நாடுகளில் 14வது உச்சிமாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இன்று இருதரப்புப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அப்போது, 2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்ட விவகாரம் தொடர்பாக நீங்கள் ஆலோசனை மேற்கொள்வீர்களா என்று அதிபர் ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ட்ரம்ப் சிறித்துக்கொண்டே, புடினை பார்த்து கையை தூக்கி "அமெரிக்க தேர்தல்களில் நீங்கள் தலையிடாதீர்கள்" என கிண்டல் செய்யும் வகையில் எச்சரித்தார்.

இதனை புடினும் நகைச்சுவையோடு எடுத்துக்கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது. கடந்த ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை தொடர்ந்து அதிபர் ட்ரம்பும், புடினும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.

Last Updated : Jul 17, 2019, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details