இமாச்சலப் பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 43 பேர் உயிரிழந்தனர். மேலும், இச்சம்பவத்தில் 35 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இமாச்சல் பேருந்து விபத்தில் பலியானோருக்கு ரஷ்ய அதிபர் இரங்கல்! - putin
மாஸ்கோ: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பேருந்து விபத்தில் பலியான 43 பேரின் குடும்பங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
putin
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், இமாச்சல் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களு அனுதாபத்தையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.