இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்ல முடியாது.
அரசியலமைப்புச் சட்டம்எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தால் பார்க்கலாம். அரசியல் வாரிசைத் தேடுவதைவிட மக்கள் பணி செய்வதே முக்கியம்" என்றார்.
ரஷ்ய அரசியலைப்புத் திருத்தச் சட்ட மசோதா மீது வரும் ஜூலை 1ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த மசோதாவை மக்கள் ஏற்றுக்கொண்டால் 2024ஆம் ஆண்டு நடக்கும் ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் போட்டியிட முடியும்.
இதையும் படிங்க : கரோனா நெருக்கடி: எச்1 பி விசாவை நிறுத்தி வைக்க திட்டமிடும் ட்ரம்ப்!