பிரிட்டனின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த தினத்தையொட்டி அப்பிராந்திய அரசு சார்பாக நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கின் தனித்தன்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஹாங்காங் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இருப்பினும், காவல்துறையின் தடுப்பை மீறி ஹாங்காங் சட்டப்பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டு, இரும்பு கம்பிகளால் அக்கட்டடத்தின் கண்ணாடி சுவர்களை உடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர்.