ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. "ஒரு நாடு இரு அமைப்பு" என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தன்னாட்சி தரப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஹாங்காங்கை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளைக் ஒடுக்கும் வெளிநாட்டின் தலையீட்டை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இது எதிர்கருத்து தெரிவிப்பவர்களின் குரலை ஒடுக்கும் விதமாக இருக்கும் என மக்கள் அஞ்சினர். இதனை எதிர்த்து, ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.