தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மணிலாவில் மகாத்மா காந்தி சிலை திறப்பு - மணிலாவில் மாகாத்மா காந்தி சிலை திறப்பு

மணிலா: அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்குள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தியின் சிலையை இன்று திறந்து வைத்தார்.

s Mahatma Gandhi bust in Phillippines

By

Published : Oct 20, 2019, 10:17 PM IST


ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பசிபிக் நாடான பிலிப்பைன்ஸுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டு தலைநகர் மணிலாவில் அமைந்துள்ள மரியம் கல்லூரிக்கு சென்றிருந்த குடியரசுத் தலைவர், அங்குள்ள அமைதிக்கான கல்வி மையத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "மகாத்மா காந்தியின் சிலை இந்தியர்கள் உங்களுக்கு அளிக்கும் பரிசாகும். மாகத்மா உலகில் உள்ள அனைத்து காலசார, சமூக மக்களையும் சேர்ந்தவராவர்.

மேலும் ஜோஸ் ரிஸால் மண்ணில் மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைப்பதில் பெருமைகொள்கிறேன். இருவரும் அமைதி மற்றும் அகிம்சாவின் வலிமையில் நம்பிக்கை கொண்டவர்களாவர்" எனத் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் பயணத்தின் விளைவாக, இதுவரை பிலிபைன்ஸுடுன் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதையும் வாசிங்க : 'கோட்டக் மகேந்திரா' வங்கியின் தலைவர் மீது பண மோசடி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details