ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள புக்குஷியமா கடல்கரையை ஒட்டி நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற சேத பாதிப்பு குறித்த நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது.
அதில், வடக்கு ஜப்பான் பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அங்குள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டது. மேலும், 37 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.