ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழ்மையான நாடாக கருதப்படும் பல்கேரியாவுக்கு இதுவரை எந்த போப் பொறுப்பில் இருந்தவர்களும் போனதில்லை. இந்நிலையில் தற்போதைய போப்பாண்டவர் போப் பிரான்சில் அந்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கேரியாவுக்கு போப் பிரான்சிஸ் பயணம் - போப்பாண்டவர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழ்மையான நாடாக கருதப்படும் பல்கேரியாவுக்கு போப் பிரான்சிஸ் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
போப் பிரான்சிஸ்
அதன்படி, இன்று பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் வந்தடைந்த அவரை, அந்நாட்டு பிரதமர் பாய்க்கோ பொரிசோவ் வரவேற்று அவருக்கு மரியாதை செய்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ள போப், அங்குள்ள அகதிகள் முகாம்களையும் பார்வையிடவுள்ளார். அகதிகள் விவகாரத்தில் அந்நாடு கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் சுழலில் போப்பாண்டவரின் பயணம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.