தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈரான் அதிபருடனான மோடி சந்திப்பு ரத்து! - iran

பிஷ்கேக்: சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிலையில், நேரமின்மை காரணமாக அச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி சந்திப்பு

By

Published : Jun 14, 2019, 9:20 PM IST

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபராகப் பொறுப்பேற்ற பின் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அந்நாடு மீது பல்வேறு தடைகளையும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

எனினும், விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் இருந்துவருகிறது. இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடையே வார்த்தைப்போர் நடைபெற்றது. இந்த இரு நாடுகளுக்கிடையே நிலவும் இந்த பதற்றம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. மேலும், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது புதிய தடை ஏதும் விதிக்கப்படாது என அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேகில் நடைபெற்றுவரும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியை, பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேரமின்மை காரணமாக இந்த பேச்சுவார்த்ததை ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details