தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மோடியின் சுற்றுப்பயணம் ஆரம்பம் - ஜூன் 7,8 தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம்! - likely to visit

டெல்லி: காபந்து பிரதமராக உள்ள மோடி, தனது பதவியேற்புக்கு பின் ஜூன் 7, 8ஆம் தேதிகளில் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி

By

Published : May 27, 2019, 1:15 PM IST

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து, பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவுக்கு, ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் மோடி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் சோலியுடன், மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு சென்ற மோடி, இப்ராஹிம் சோலியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details