இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, கராச்சி நகரில் அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி துணைத் தலைவர் மரியம் நவாஸின் கணவர் சஃப்தார் அவான் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்வத்தின்போது சிந்து மாகாணத்தில் உயர் அதிகாரியை அந்நாட்டு ராணுவ வீரர்கள் கடத்திச் சென்று அவமித்ததாகக் கூறி, அந்நாட்டு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது போலீஸார், ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதாக, தகவல் வெளியானது. இதனை அடுத்து அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்வத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக பேசிய மரியம் நவாஸ், " பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒரு பயனற்ற மனிதர், நாட்டில் என்ன நடக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. அதேப் போல் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை.தானும், தனது கணவர் சஃப்தாரும் வீட்டில் உறங்கி கொண்டிருக்கையில், ராணுவ அதிகாரிகள் தங்களது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, தனது கணவரையும், சிந்து மாகாணக் காவல் உயர் அதிகாரியையும் கைது செய்து கடத்திச்சென்றனர்.