பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள விமான நிலையத்திலிருந்து நோயாளி ஒருவரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தனி விமானம் மூலம் அழைத்துச் செல்ல முயன்றனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக புறப்படும் சமயத்தில் ஓடுபாதையிலேயே விமானம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அதற்குள் விமானம் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்தனர். இத்தகவலை மணிலா விமான நிலைய பொது மேலாளர் எட் மோன்ரியல் உறுதிபடுத்தியுள்ளார்.
விமானத்தில் இருந்த எட்டு பேரில் இருவர் மட்டும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரில் ஒரு அமெரிக்கர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஜஸ்டின் ட்ரூடோ மனைவி!