பாகிஸ்தானில் கிராமப்புறத்தை இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் போட்டி போட்டு வேகமாக செல்கின்றனர். அதில் ஒருவர் பெட்ரோல் டேங்க் மேல் குழந்தையை வைத்து செல்வதுபோல, பசு மாட்டை முன்னாடி உட்கார வைத்து செல்கிறார். பசுமாடு போர்வையால் மூடப்பட்டுள்ளது. தலை மட்டும் வெளியே தெரியும் படி உள்ளது. அந்த மாடும் மிரளாமல், ஹாயாக உட்கார்ந்து பசுமாடு பயணிக்கிறது. இதனை முன்னால் செல்லும் நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பாதுகாப்பாக சென்றாலும் பசுவை இப்படி வைத்து செல்வது ஆபத்தான பயணமாக இருக்கிறது.
பைக்கில் பயணிக்கும் பசுமாடு; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..! - two wheeler
பாகிஸ்தானில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் ஒருவர், பெட்ரோல் டேங்க் மீது குழந்தையை போல பசுமாட்டை உட்கார வைத்து செல்லும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் காணொளி
இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்த இந்தியாவின் பசுக்காவலர்கள், பசுமாட்டை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் அந்த நபரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.