பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதாக கடந்த சனிக்கிழமை அன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் புகார்கள் வந்துள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் முகமத் ஃபைசல், " இணையதளம் முடக்கப்பட்டது குறித்து பல்வேறு நாடுகளில் இருந்தும் தொடர்ந்து புகார்கள் வந்தது. ஆனால் பாகிஸ்தானை பொருத்தவரை இணையதளம் சரியாக இயங்கி வருகிறது.
பாகிஸ்தான் இணையதளம் முடக்கம்!
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹேக்கர்ஸ்
ஆஸ்திரேலியா, அரபு நாடுகள், பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இணையதளம் இயக்குவதில் சிக்கல் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழில்நுட்பப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறினார். இந்த ஹேக்கிங் சம்பவத்தில் தொடர்புடையவர்கள், இந்தியாவில் இருந்து இயங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.