தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் இம்ரான் ஆட்சி மீது அதிருப்தி அதிகாரிப்பு - பாகிஸ்தான் சர்வே முடிவுகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசின் மீது 68 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Imran
Imran

By

Published : Mar 2, 2020, 10:37 AM IST

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த அரசு சுதந்திரமாக இயங்கவில்லை எனவும் ராணுவத்தின் கைப்பாவையாகச் செயல்படுகிறது எனவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு குறித்து அண்மையில் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இம்முடிவுகள் பிரதமர் இம்ரான் கானுக்கு அதிர்ச்சியளிக்கும்விதமாக உள்ளன.

அதன்படி, பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசின் மீது 68 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மொத்தம் உள்ள வாக்காளர்களில் 32 விழுக்காடு மக்கள் மட்டுமே இம்ரான் அரசு திருப்திகரமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த அரசைக் காட்டிலும் தற்போதைய அரசு மோசமாக உள்ளது என 59 விழுக்காடு மக்கள் தெரிவிக்கின்றனர்.

59 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் பாகிஸ்தான் சரியான திசையில் செல்லவில்லை எனக் கவலைத் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இம்ரான் கான் மீதான அதிருப்தி அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்லி கலவரம்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் குரல் ஒலிக்குமா ?

ABOUT THE AUTHOR

...view details