பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் 107 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து - கராச்சியில் பயணிகள் விமான விபத்து
20:39 May 22
பாகிஸ்தான் விமான விபத்து - 19 பேர் உயிரிழப்பு
18:34 May 22
பாகிஸ்தான் விமான விபத்து காரணமாக மிகுந்த வருத்தம் அடைக்கிறேன் -பிரதமர் மோடி
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், பாகிஸ்தான் விமான விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதில் மிகுந்த வருத்தம் அடைக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாக மீள விரும்புகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.
16:59 May 22
பிஐஏ விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் - இம்ரான் கான்
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிஐஏ விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாகி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு, நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
15:43 May 22
கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துகுள்ளானது.
பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானம் கீழே விழுந்து விபத்துகுள்ளனாது. விபத்துக்குள்ளான ஏ320 விமானம் 99 பயணிகள், 8 பணியாளர்களுடன் கராச்சி விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள குடியிருப்பு காலனியில் விழுந்துள்ளது.
விமானம் தரையிறங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். விமானம் விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்பு குழுவினர், பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.