கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட பாகிஸ்தானில் உள்ள முல்தான் மாகாணத்தை சேர்ந்த முஹம்மது அம்ஜத் கான் என்பவர் அல் ஃபவுஸ் என்ற படகு வாங்குவதில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்-ஹுசைனி படகின் கேப்டனாக இருந்த பஹவல்பூரைச் சேர்ந்த ஷாஹித் கபூர், பயங்கரவாதிகள் அல் ஃபவுஸ் படகை பயன்படுத்த உதவியாக கூறப்படுகிறது.
சாஹிவால் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான், லாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதீக்-உர்-ரெஹ்மான், ஹபீசாபாத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, குஜ்ரான்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முஷ்டாக், தேரா காசி கான் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நயீம், சர்கோதா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷகூர், முஹம்மது சபீர் லோத்ரான் மாவட்டம், ரஹீம் யார்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகில் அகமது உள்ளிட்டவர்கள் ஐக்கிய நாடுகள் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களான லஷ்கர் -இ -தயிப் அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் மோசமான நடவடிக்கைகளுக்காக இந்தியா மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடு என்று கூறியுள்ளது. எவ்வாறாயினும், இந்திய அரசின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 1210 உயர்மட்ட, பயங்கரவாதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஹபீஸ் சயீத், மசூத் அசார் அல்லது தாவூத் இப்ராஹிம் ஆகியோர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.