தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோயில்களை தகர்ப்போம் - மிரட்டல் விடுத்துள்ள பயங்கரவாத அமைப்பு! - terrorist

சண்டிகர் : இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.

JeM threatens

By

Published : Sep 16, 2019, 8:13 AM IST

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்தக் ரயில் நிலைய அலுவலகத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ-முகமது ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு விடுத்துள்ளமிரட்டல் கடிதம்

அந்த கடிதத்தில், ஹரியானா, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்களை வெடிகுண்டி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனைதொடர்ந்து ரோஹ்தக் ரயில்வே பாதுகாப்பு படையினர், அம்மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலபடுத்தியுள்ளது.

தீவிர சோதனை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படையினர்

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் காவல்துறையினரால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ABOUT THE AUTHOR

...view details