கிழக்கி லடாக்கில் இந்தியா - சீனா நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னையே முடிவடையாத நிலையில், கில்கிட் - பால்திஸ்தான் பகுதியில் உள்ள விமான தளத்தில் பாகிஸ்தான் விமான படையினர் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து உயர்மட்ட அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், பாகிஸ்தான் விமான படை தளபதி முஜாஹித் அன்வர் கான் கடந்த வெள்ளிக்கிழமை விமான படையின் பயிற்சியை பார்வையிட்டதோடு, முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். கிழக்கு லடாக்கின் கட்டுப்படுத்தப்பட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா - சீனா நேரடியாக மோதிக்கொண்ட நேரத்தில் பாகிஸ்தான் விமான படை தளபதியின் வருகை அமைந்துள்ளது.
இதனிடையே ஜம்மு - காஷ்மீரை பாகிஸ்தானும், லடாக்கில் சீனாவும் என இரு எல்லைப் பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்போவதாகவும் சில பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.