பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் தெற்கேவுள்ள ரஹீம் யார்கான் என்ற பகுதியில் இன்று காலை வந்துகொண்டிருந்த கராச்சி-ராவல்பிண்டி தேஸ்காம் எக்ஸ்பிரஸில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் 73 பேர் பலியாகினர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில், "பயணிகள் தங்கள் காலை உணவை தயாரித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தீவிபத்து ஏற்பட்டது. அவர்கள் சமையலுக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்த எண்ணெய்யும் - தீ வேகமாகப் பரவ காரணமாக அமைந்தது" என்று கூறினார்.
மேலும், விபத்தில் பலியானவர்களைவிட தீயிலிருந்து தப்பிக்கவேண்டும் என்ற பதற்றத்தில், ஓடும் ரயிலிருந்து குதித்தவர்களே அதிகமாக உயிரிழந்தார்கள் என்றும், நெடுந்தூர ரயில் பயணங்களில் சொந்தமாக அடுப்புகளை மறைத்து எடுத்துவருவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து முறையான பராமரிப்புப் பணிகள் இல்லாத காரணத்தால், பாகிஸ்தானில் ரயில் விபத்து என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவருகிறது. முன்னதாக, இந்தாண்டு செப்டம்பர் மாதம் நான்கு பேரும், ஜூலையில் 11 பேரும் பாகிஸ்தானில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியாகினர்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் விருதை பெற மறுத்த கிரேட்டா தன்பெர்க்!