பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் மீது 2016ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. துபாயிலுள்ள முஷாரஃப்பை பாகிஸ்தான் கொண்டு வந்து ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் கடும் நடவடிக்கை! - record
இஸ்லாமாபாத்: தேச துரோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப், நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப்
இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி ஆசிஃப் சயீத் கோசா, தேச துரோக வழக்கு சாதாரண குற்றமில்லை என்றும்,முஷாரஃப் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, முஷாரஃப்பை பாகிஸ்தான் கொண்டு வர அரசுஎடுத்த நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுநோட்டீஸ் விடுத்தது குறிப்பிடத்தக்கது.