மியான்மரில், ராணுவ ஆட்சி பிப்ரவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்து வைத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது.
இதுவரை 550-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐ.நா. சபை, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.