அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் கிழக்கு கடலில் ராணுவக் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை!
பியாங்யாங்: கிழக்கு கடலை நோக்கி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைக் கண்டிக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழக்கு கடலை நோக்கி குறைந்த தூரம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதனையிட்டது. இதனால், கொரியா தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, மீண்டும் அதே வகையான இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதனையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடகொரியாவின் தென் ஹாம்கயாங் மாகாணத்தில் உள்ள ஹாம்ஹுங் நகரத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகள், கிழக்கு கடலை சென்றடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இது வடகொரியா, தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.