சர்வதேச அளவில் கரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. அதாவது வியாழக்கிழமை (நவ.29) ஆம் தேதி 8 மணி முதல் வெள்ளிக்கிழமை (நவ.30) ஆம் தேதி இரவு 8 மணி வரை ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமான விக்டோரியாவில் இரண்டாவது நாளாக யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.