தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிபர் உடல்நிலை குறித்து வாய் திறக்க மறுக்கும் வடகொரிய ஊடகங்கள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து அந்நாட்டு ஊடகங்கள் எந்தவொரு தகவலையும் பகிராமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Kim  Jong Un
Kim Jong Un

By

Published : Apr 24, 2020, 4:47 PM IST

உலக நாடுகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. ஆனால் வடகொரியாவில் வைரஸ் பரபரப்பை விட அரசியல் பரபரப்புதான் அதிகமாக உள்ளது

அந்நாட்டு அதிபரான சர்ச்சை நாயகன் கிம் ஜாங், உடல்நிலை பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை தகவல் அளித்ததாக சி.என்.என். நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதேவேளை கிம் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக வலம்வரும் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுத்துள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக வடகொரிய ஊடகங்கள் மௌனம் சாதித்துவருவது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கடந்த 11ஆம் தேதிக்குப்பின் வடகொரிய ஊடகம் எதிலும் கிம் தென்படவில்லை. ஊடகங்களும் அவரது உடல்நிலை தொடர்பான அனைத்து கேள்விகளையும் தொடர்ச்சியாக புறக்கணித்துவருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மாத காலம் தலைமறைவாக இருந்து , குணமடைந்த பின்னரே வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புயல் வேகத்தில் கரோனா: அதிர்ச்சியில் அரசு

ABOUT THE AUTHOR

...view details