தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகை அழிக்கும் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்ய சீனாவுடன் கைகோர்த்துள்ள பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்ய சீனாவுடன் பாகிஸ்தான் கைகோர்த்துள்ளதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Pakistan Foreign Office
Pakistan Foreign Office

By

Published : Jul 27, 2020, 5:16 PM IST

உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக வெளியான தகவலுக்கு பாகிஸ்தான் தற்போது விளக்கமளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ள செய்தித்தாள் ஒன்றில் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், கொடிய 'ஆந்த்ராக்ஸ்' உள்ளிட்ட நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்வது போல உயிரி போர் திறன்களை விரிவுபடுத்த சீனாவும் பாகிஸ்தானும் மூன்று ஆண்டுகளுக்கான ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, வூஹானிலுள்ள வைராலஜி ஆய்வகத்தில்தான் கரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் செய்தி சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் ராணுவ பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு கையெழுத்திட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தச் செய்தியை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசியல் ரீதியாக எங்களை பழிவாங்க, முற்றிலும் உண்மைக்கு மாறான தரவுகளுடன் எழுதப்பட்ட ஒரு செய்தி.

அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆய்வகம் குறித்து எவ்வித ரகசியமும் இல்லை. அங்கு கிருமிகள் குறித்த ஆராய்ச்சிகள் மட்டுமே அதிக பாதுகாப்புடன் நடைபெற்றுவருகிறது. வளர்ந்துவரும் சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்து கண்காணிக்க இது உதவும்.

பாகிஸ்தான் எப்போதும் உயிரி மற்றும் நச்சு ஆயுத ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Biological and Toxins Weapons Convention என்று அழைக்கப்படும் உயிரி மற்றும் நச்சு ஆயுத ஒப்பந்தம் 1975ஆம் ஆண்டு கையெழுத்தானது. 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை தடை செய்யும் ஒரு ஒப்பந்தமாகும்.

இதையும் படிங்க: நிறவெறிக்கு எதிராக போராட்டம்: சாலையில் நிர்வாணமாக அமர்ந்த பெண்!

ABOUT THE AUTHOR

...view details