ஹைதராபாத்: அதீத சக்திகள் தொடர்ந்து மழுங்கடிக்கப்பட்டாலும், நியூசிலாந்து நாடு கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் வெற்றிகண்டுள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டென். அவரது திறமையும் தொலைநோக்கு பார்வையும் நாட்டை கரோனா நோய்க் கிருமித் தொற்றிலிருந்து காப்பாற்றியுள்ளது. ஒருபுறம், அவர் கடுமையான ஊரடங்கை செயல்படுத்திய நிலையில், மறுபுறம், அவர் தனது மக்களை சரிவர கவனித்து வருகிறார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டென் பிப்ரவரி 20 ஆம் தேதி தான் நியூசிலாந்தில் கோவிட்-19 நோய் கொண்ட முதல் நோயாளி கண்டறியப்பட்டார். கரோனா கிருமித் தொற்றுக் கொண்ட அப்பெண்மணி ஈரான் நாட்டிலிருந்து திரும்பியபோது, கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. துரிதமாக செயலாற்றிய பிரதமர் ஜெசிண்டா ஆர்டென், வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து பயணிகளையும், அவர்கள் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி அரசு அலுவலர்களும் சிட்டாக நோய் பாதிப்புள்ளவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். முடிவு, கரோனா நோய்க் கிருமி, சமூக பரவலை நெருங்குவதற்குள், அரசு அதை அப்படியே ஒடுக்கியது.
தேவையான முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கரோனா நோய்க் கிருமி ஆபத்தான விகிதத்தில் பரவி வந்தது. பிரதமர் மார்ச்15 முதல் 14 நாட்களுக்கு பொதுமக்கள் அனைவரையும் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தினார். ஆனால் இந்த அறிவிப்பை வெளியிட்ட 11ஆவது நாளான மார்ச் 26ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கிற்கு உத்தவிட்டார் ஜெசிண்டா. மக்களும் அதனை இன்முகத்தோடு ஆதரித்து, அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கினர்.
கரோனா நோய்க் கிருமித் தொற்றினை அதிகமாக பரப்பியவர்கள்!
அதனையடுத்து கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறையத் தொடங்கியது. பிரதமரின் உத்தரவின்படி அரசு அலுவலர்கள், அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அதற்கென தனி வியூகங்களை வகுத்து, அந்தந்த இடங்களுக்கு அதனை செயல்படுத்தினர்.
தன் நாட்டு மக்களுக்கு ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும்படியும் ஜெசிண்டா பார்த்துக்கொண்டார். மேலும், கரோனா பெருந்தொற்று சமயத்தில், அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்திருந்தார். அதிரடியாக, அதீதமாக செயலாற்றிய அலுவலர்களின் திறன், மக்கள் மத்தியின் நம்பிக்கையை ஊட்டியது.
இந்த 15 நாடுகளில் இப்போதைக்கு கரோனா இல்லை
மக்களும் அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நாட்டு மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை வளர்ந்து. தற்போது வரை கோவிட்-19 நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,401. இதில் 770 பேர் முற்றிலுமாக குணமடைந்துள்ளனர். 9 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். பிற நாடுகளை ஒப்பிடுகையில், நியூசிலாந்தில் கரோனா நோய்க் கிருமியின் பரவல் வெகு குறைவு தான். ஆம், பிரதமர் ஜெசிண்டா முன்னெச்சரிக்கையாக முதலில் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் பொருட்டு, நல்ல விளைவுகளை தற்போது நாடு கண்டுள்ளது.
ஐநா பொது சபை கூட்டத்தின் போது குழந்தையுடன் நியூசிலாந்து பிரதமர் முன்னதாக ஐநா பொது சபை கூட்டத்தின் போது நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்றது வரலாற்றில் சிறப்பான நிகழ்வாக காணப்பட்டது. ஊரடங்கின் போது குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த, சில கதை மற்றும் அறிவுசார் புத்தகங்களுக்கு அனுமதியளித்து, அதனை குழந்தைகளுக்கு கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார் ஜெசிண்டா.