பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த தெஹ்மினா ஜான்ஜுவா கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஒய்வு பெற்றார். இதனையடுத்து புதிய வெளியுறவுத்துறை செயலாளராக, இந்தியாவிற்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் சோஹல் மமூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாக். வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த புதிய செயலாளர்! - foreign minister
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளராக பதவியேற்றுள்ள சோஹல் மமூத் அந்நாட்டு வெளியுறத்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த புதிய செயலாளர்!\
இந்நிலையில், வெளியுறவுத்துறை செயலாளராக பதவியேற்று கொண்ட சோஹல், இன்று அந்நாட்டு வெளி்யுறவுத்துறை அமைச்சர் குரேஷியை சந்தித்து வெளியுறவு கொள்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பல்வேறு பொறுப்பில் சிறந்து விளங்கியவராக கருதப்படும் சோஹல் மமூத், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு ஆசிய பிரிவுகளுக்கு கூடுதல் செயலாளராகவும், வெளியுறவுத்துறை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.