கொரோனா வைரஸ் என்ற கொவிட் 19 வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதனால் உலக நாடுகள் விசா உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளனர். இந்த தொற்று நோயினால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) வரை அனைத்து வெளிநாட்டுக்கும் விசாவை நிறுத்துவதாக நேபாளம் அறிவித்துள்ளது. முன்னதாக சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விசாவை நேபாள அரசு நிறுத்தியது.
இதற்கிடையில் எவரெஸ்ட் சிகர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “நேபாளமும் இந்தியாவும் ஒரு நுண்ணிய எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே 100 க்கும் வழிகள் உள்ளன.